நான் பயப்படும் நாளினிலே
Naan Bayapadum Naalinile
நான் பயப்படும் நாளிலே உம்மை நம்புவேன் கலங்கிடும் நாளிலே உம்மையே நம்புவேன் – 2 கர்த்தர் என் சகாயர்-3 நான் பயப்படேன் – 2 – (2)
கர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார் நான் அமர்ந்திருப்பேனே எனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதம் வாய்க்காமலே போகும் – 2 மந்திரமோ சூனியமோ சர்ப்பங்களோ தேள்களோ மரணமோ சேதங்களோ அசைக்கவே முடியாதே – 2 கர்த்தர் என் சகாயர்-3 நான் பயப்படேன் – 2 – (2)
கர்த்தர் என் விளக்கை எரிய செய்வீர் நான் எரிந்து கொண்டிருப்பேன் நான் மலையின் மேலுள்ள பட்டணமாக எரிந்து பிரகாசிப்பேன் – 2 யார் என்ன சொன்னாலும் யார் என்னை தடுத்தாலும் யார் என்னை பகைத்தாலும் அசைக்கவே முடியாது – 2 கர்த்தர் என் சகாயர்-3 நான் பயப்படேன் – 2 – (2)
கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடித்திடுவாரே நான் முன்னேறி செல்வேன் கெம்பீரமாகவே இயேசுவின் நாமத்திலே – 2 தடைகளோ தாமதமோ கஷ்டமோ நஷ்டமோ கண்ணீரோ காயங்களோ அசைக்கவே முடியாது – 2 கர்த்தர் என் சகாயர்-3 நான் பயப்படேன் – 2 – (2)