TA-1692
Tamil

நான் நல்லவள் இல்லை ஆண்டவரே

Naan Nallavan Illai

0
views
பல்லவி

நான் நம்பி வந்தேன் இயேசு நாதா என்னை ஏற்றுக்கொள்ளும் உம்மையன்றி மீட்பரில்லை உலக இரட்சகரே - நீரே

1ம் சரணம்

எந்தன் பாரம் தாங்கிடவோ ஏதும் என்னில் பெலனுண்டோ யாரிடம் செல்வேன் என்னை விசாரிப்பாரில்லை - நான் என் பாவ பாரம் நீங்கிடும் தேவா இயேசுவே இரங்கும் - என்

2ம் சரணம்

துன்பம் தொல்லை துயரங்களும் தாங்கொண்ணாத நோய் பிணியும் சோதனைகளும், என்னை நெருக்கி வாட்டினும் சுகம் தாரும் என்னை விடுதலையாக்கும் சர்வ வல்லவரே - நீர்

3ம் சரணம்

உன்னத அன்புள்ளவரே உண்மை நீதி உடையவரே இந்த ஏழைக்காய் நீர் பரிந்து பேசுமே - நீர் இருளான வாழ்வில் வெளிச்சம் தாரும் இயேசு இரட்சகரே - என்

4ம் சரணம்

இயேசுவே உம் இரத்தத்தினால் என் மனதை கழுவிடுமே மன்னிப்படைந்தே பரிசுத்தம் ஆகவே - பாவ என் பாவம் யாவும் அறிக்கை செய்தேனே என்னை மீட்டருளும் - இன்று

5ம் சரணம்

கல்வாரியைக் காண்கையிலே கல் மனமும் உருகிடுதே எத்தனை பாடோ ஈன சிலுவை மீதிலே-உமக் எனக்காக யாவும் செய்து முடித்தே இயேசுவே மரித்தீர் - என்

6ம் சரணம்

என்னை மீட்க மரித்தவரே என்னோடிருக்க உயிர்த்தவரே தேவ ராஜ்யமே அதை அடைந்து வாழவே-தூய தினம் தேடி உம்மை வேண்டுகிறேனே தாரும் பரம் பொருளே - என்றும்