TA-1699
Tamil

நான் உம்மை மறந்தாலும் – நீர்

Naan Ummai Marandhalum

0
views
பல்லவி

நான் உம்மை பாடிட பாத்திரன் அல்லவே நீர் என்னை தேடிட பரிசுத்தன் அல்லவே-2 தேடி ஓடி ஆற்றி தேற்றி அள்ளி அணைத்த தெய்வமே மார்பில் என்னை சேர்த்துக்கொண்ட மாறிடாத இராஜனே என்ன கிருபை இது என்னை வாழ செய்தது என்ன புதுமை இது என்னை பாட செய்தது-2 ஓ ஓ ஓ ஓசன்னா ஆ ஆ ஆ அல்லேலூயா-2

1ம் சரணம்

ஒவ்வொரு நாளிலும் கிருபைகள் புதியதே வாழ்ந்திடும் நாள் எல்லாம் அது மிக நல்லதே-2 குருசில் தொங்கி இரத்தம் சிந்தி மீட்பு தந்த இயேசுவே பிள்ளை என்னை உந்தன் பாதம் சேர்த்து கொள்ளும் தகப்பனே

2ம் சரணம்

பாவத்தில் வாழ்ந்த என்னை பரிசுத்தமாக்கினீர் அன்புடன் தேடி வந்து கிருபையால் காக்கின்றீர்-2 கனிந்து உருகி பரிந்து பேசி மீட்டுக்கொண்ட இயேசுவே பிள்ளை நானும் புவியில் வாழ இந்த கிருபை போதுமே