♪♫
TA-1700
Tamil
நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
Naan Ummidathil
20
views
பல்லவி
நான் உனக்கு துணை நிற்கிறேன் என்றவரே ஸ்தோத்திரம் வலக்கரம் பிடித்து துணையாய் நிற்பவரே வல்ல தேவனே ஸ்தோத்திரம்
1ம் சரணம்
பாவத்தை ஜெயிக்க பரிசுத்தமாய் வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம் இரத்தத்தால் கழுவி ஆவியினால் நிரப்பி அரவணைத்தவரே ஸ்தோத்திரம் – நான்
2ம் சரணம்
பாடுகள் ஜெயிக்க மகிழ்ச்சியாய் நான் வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம் வார்த்தையால் தேற்றி வல்லமையால் நிரப்பி நடத்துபவரே என்றும் ஸ்தோத்திரம் – நான்
3ம் சரணம்
சாத்தானை ஜெயிக்க வெற்றியாய் என்றும் வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம் அன்பினால் அணைத்து அபிஷேகத்தால் நிரப்பி ஆதரிப்பவரே என்றும் ஸ்தோத்திரம் – நான்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.