TA-1709
Tamil

Naanae Vaaninintru

Naanae Vaaninintru

14
views
பல்லவி

நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் மகனே(ளே) – உனக்கு எல்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை என்னாலன்றி உனக்க நிம்மதி இல்லை

1ம் சரணம்

நான் தருவேன் உனக்கு சமாதானம் நான் தருவேன் உனக்கு சந்தோஷம் கலங்காதே என் மகனே கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்

2ம் சரணம்

உனக்காக சிலுவையில் நான் மரித்தேன் உனக்காக திரு இரத்தம் நான் சிந்தினேன் என் மகனே வருவாயா இதயத்திலே இடம் தருவாயா

3ம் சரணம்

உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன் உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன் வருவாயா என் மகனே இதயத்திலே இடம் தருவாயா

4ம் சரணம்

நீ நம்பும் மனிதர் கைவிடலாம் ஆனால் நான் ஒருபோதும் கைவிட மாட்டேன் கலங்காதே என்மகனே கண்மணிபோல் உன்னைத் காத்திடுவேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.