TA-1710
Tamil

நானே வழி நானே சத்தியம்

Naanae Vazhi Naanae

20
views
பல்லவி

நான் அல்ல இனி இயேசுவே – என்னில் இன்றும் என்றும் வாழ்கின்றார்

1ம் சரணம்

கண்களிலே நல் தூய்மை உண்டு கருத்தினிலே என்றும் மேன்மை உண்டு செயலினிலே பெரும் நோக்கம் உண்டு பயன்பட வாழ்வதில் இலாபமுண்டு

2ம் சரணம்

நான் என்ற என் சுயநீதியை தான் என்ற என் அகம்பாவத்தை சிலுவையிலே நிதமும் சேர்த்தறைந்தே சேர்ந்தவரோடு பிழைத்திருப்பேன்

3ம் சரணம்

இலட்சியப்பாதையில் நான் நடப்பேன் இரட்சிப்பின் தேவனை உயர்த்திடுவேன் தேவனின் இராஜியம் திசையெங்கிலும் தீவிரம் பரவிட நான் உழைப்பேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.