TA-1725
Tamil

நல் மீட்பர் யேசுவே

Nal Meetpar Yesuvae

22
views
1ம் சரணம்

நள்ளிரவில் மா தெளிவாய் மாண் பூர்வ கீதமே விண் தூதர் வந்தே பாடினார் பொன் வீணை மீட்டியே: மாந்தர்க்கு சாந்தம் நல் மனம் ஸ்வாமி அருளாலே, அமர்ந்தே பூமி கேட்டதாம் விண் தூதர் கீதமே.

2ம் சரணம்

இன்றும் விண் விட்டுத் தூதர்கள் தம் செட்டை விரித்தே துன்புற்ற லோகம் எங்குமே இசைப்பார் கீதமே; பூலோகக் கஷ்டம் தாழ்விலும் பாடுவார் பறந்தே; பாபேல் கோஷ்டத்தை அடக்கும் விண் தூதர் கீதமே.

3ம் சரணம்

விண்ணோரின் கீதம் கேட்டுப் பின் ஈராயிரம் ஆண்டும், மண்ணோரின் பாவம் பகை போர் பூலோகத்தை இன்றும் வருத்தும்; மாந்தர் கோஷ்டத்தில் கேளார் அக்கானமே, போர் ஓய்ந்தமர்ந்து கேட்டிடும் விண் தூதர் கீதமே;

4ம் சரணம்

பார் வாழ்க்கையின் மா பாரத்தால் நைந்து தவிப்போரே, சோர்ந்தேபோய் பாதை நகர்ந்து தள்ளாடிடுவோரே, நோக்கும், இதோ உதித்ததே மா நற் பொற் காலமே! நோவை மறந்து கேட்டிடும் விண் தூதர் கீதமே.

5ம் சரணம்

தோன்றிடும் இதோ சீக்கிரம் பேரின்ப காலமே! சான்றோராம் தீர்க்கர் ஆண்டாண்டும் உரைத்த காலமே! போர் ஓய்ந்து பூமி செழிக்கும் பூர்வ மாண்போடுமே; பாரெங்கும் பரந்தொலிக்கும் விண் தூதர் கீதமே.

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.