நல்ல சாட்சியாய் நீ தேவனுக்காய் தீங்கு அனுபவி
Nalla Saatsiyaay Nee
நல்ல செய்தி, இயேசுவை நோக்கிப்பார், ரட்சிப்பார்; நம்பி வந்த அவரை நோக்கிப்பார், ரட்சிப்பார்; எந்தப்பாவியாயினும் தள்ளமாட்டேன் என்கிறார்; துரோகஞ் செய்தபோதிலும் நோக்கிப்பார், ரட்சிப்பார்.
எங்கும் செய்தி சொல்லுவோம் நோக்கிப்பார், ரட்சிப்பார்; தேசா தேசம் கூறுவோம் நோக்கிப்பார், ரட்சிப்பார்; எந்த நாடு தீவிலும் இயேசு காத்து நிற்கிறார்; மூடன் நீசன் ஆகிலும் நோக்கிப்பார், ரட்சிப்பார்.
இன்னும் கேள், மா நேசராம் இயேசுவே காக்கிறார்; நம்பும் பக்தரையெல்லாம் காக்கிறார், காக்கிறார்; சற்றும் தவறாமலும் கையில் ஏந்திக்கொள்ளுவார்; கேடுபாடில்லாமலும் காக்கிறார், காக்கிறார்.
சுவிசேஷம் இதுவே காக்கிறார், காக்கிறார்; பாவம் நீக்கிப் பின்னுமே காக்கிறார், காக்கிறார்; மோட்சஞ் சேருமளவும் தாங்கிக்கொண்டே இருப்பார்; தீமையைச் செய்யாமலும் காக்கிறார், காக்கிறார்.