TA-1729
Tamil

நம் இயேசுவின் வருகை இன்று வெகு சமீபமாய் தெரிகின்றது

Nam Iyaesuvin Varukai Inru

16
views
பல்லவி

நம் இயேசு நல்லவர் ஒரு போதும் கைவிடார் ஒரு நாளும் விலகிடார் ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம் சாத்தானை மிதிப்போம் தேசத்தை சுதந்திரிப்போம்

1ம் சரணம்

அதிசயமானவர் ஆறுதல் தருகிறார் சர்வ வல்லவர் சமாதானம் தருகிறார் – உனக்கு

2ம் சரணம்

கண்ணீரைக் காண்கிறார் கதறலைக் கேட்கிறார் வேதனை அறிகிறார் விடுதலை தருகிறார் – இன்று

3ம் சரணம்

எதிர்காலம் நமக்குண்டு எதற்கும் பயமில்லை அதிகாரம் கையிலே ஆளுவோம் நேசத்தை – நாம்

4ம் சரணம்

நொறுங்குண்ட நெஞ்சமே நோக்கிடு இயேசுவை கூப்பிடு உண்மையாய் – இன்று குறையெல்லாம் நீக்குவார் – உன்

5ம் சரணம்

நண்பனே கலங்காதே நம்பிக்கை இழக்காதே கண்ணீரைத் துடைப்பவர் கதவண்டை நிற்கிறார்

6ம் சரணம்

எத்தனை இழப்புகள் ஏமாற்றம் தோல்விகள் கர்த்தரோ மாற்றுவார் கரம் நீட்டித் தேற்றுவார்

7ம் சரணம்

என் இயேசு வருகிறார் மேகங்கள் நடுவிலே மகிமையில் சேர்த்திட மறுரூபமாக்குவார்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.