Nanmai Sorubiyae
Nanmai Sorubiyae
நன்மைகள் செய்யாதென்னை பிரித்தீர் உம் சேவைக்காய் எடுத்தென்னை பயன்படுத்தும் – 2 பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர் கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர் – 2
கல்லையும் மண்ணையும் நான் வணங்கி வந்தேன் நீர் என்னை காண்பதை நான் அறியாதிருந்தேன் – 2 எந்தனின் கோத்திரத்தில் உமை யாரும் அறிந்ததில்லை – 2 இரட்சிப்பை எனக்கு தந்து என்னை மட்டும் நீர் பிரித்தீர் – 2 பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர் கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர் – 2
தகுதிகள் பாராமல் தெரிந்து கொண்டீர் எதையும் எதிர்பார்க்காமல் பிரித்தெடுத்தீர் – 2 அழியா உம் ராஜ்ஜியம் கட்ட எத்தனாய் வாழ்ந்த என்னை – 2 ஜாதிகளின் மத்தியில் நின்று லேவியனாய் நீர் பிரித்தெடுத்தீர் – 2 பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர் கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர் – 2
கர்ப்பத்தின் கருவில் நான் உருவாகுமுன்னமே பெயர் சொல்லி என்னை நீர் பிரித்தெடுத்தீர் – 2 யாருமே கண்டுகொள்ளாமல் ஆழத்தில் வாழ்ந்திருந்தேன் – 2 அப்பா உங்க அழகான கண்கள் என்னை பிரித்தது – 2 பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர் கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர் – 2