♪♫
TA-1761
Tamil
ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுமே - 2
Neeranri Vaazhvaethu Iraivaa!
0
views
பல்லவி
நீரில்லாமல் நான் இல்லையே நீர் சொல்லாமல் உயர்வு இல்லையே – 2 உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி – 2
1ம் சரணம்
அழைத்த நாள் முதல் இதுவரை என்னை விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே உடைந்த நாட்களில் கூடவே இருந்து சுகமாக்கும் மருத்துவம் பிரசன்னமே விலை போகா என்னையும் மலை மேலே நிறுத்தி அழகு பார்ப்பதும் பிரசன்னமே – 2 உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி – 2
2ம் சரணம்
கல்வி அறிவும் பல்கலை சான்றும் இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமே அழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன் நீரூபிப்பதும் உங்க பிரசன்னமே பிற பாஷை பேசுவோர் பிற தேசம் வாழுவோர் என்னை வேண்டுவது உம் பிரசன்னமே – 2 உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி – 4