TA-1763
Tamil

அரணில், குடிசையில்

Neerthiyanaanaitum

0
views
1ம் சரணம்

நேசரே உம் நேசம் நினைக்கையில் நெஞ்சம் உருகிடுதே நீசனாம் என்னையுமே பாசத்தால் ஏற்றுக்கொண்டீர் அநாதி சிநேகத்தால் ; காருண்யத்தால் இழுத்தீர் நானல்ல, நீரே ! தெரிந்தெடுத்தீரே என்னையும் உந்தன் அன்பினால் பிரிக்க இயலாதே யாதொன்றினாலுமே இவ்வன்பினின்றும் இயேசுவே !

2ம் சரணம்

பாவம் போக்கி பரிசுத்தனாக்கி - உம் சந்நிதியில் நிறுத்தி பரிசுத்தம் நீதியோடும் இயேசுவே உம்மையே யான் சேவிக்க அழைத்தீரன்றோ ; ஜீவிய காலமெல்லாம்

3ம் சரணம்

மாறிடா உம்சிநேகத்தால் மாற்றினீர் எந்தன் சாபமெல்லாம் உம் திரு சித்தம் போல அழைத்தீரே எனையுமே ஆசீர்வதித்திடவே ; ஆதரை மீதினிலே

4ம் சரணம்

ஊற்றினீர் எம் உள்ளத்தில் உம்மன்பை உன்னத ஆவியினால் உன்னத உபதேசம், ஊழியருமே ஈவாய் உன்னதா உவந்தளித்தீர் ; உந்தனின் சாயலடைய

5ம் சரணம்

“வந்திடுவேன் சேர்த்திட உந்தனை” என்றுரைத்தச் சென்றீரே உந்தனின் வாக்கதையே எண்ணியே நேசத்தினால் தவிக்குதே எந்தன் உள்ளமே ;