TA-1764
Tamil

அம்புடன் விதவையும் போட்ட காசை

Neethiyamo Neer Sollum

18
views
பல்லவி

நீதியில் நிலைத்திருந்து உம் திருமுகம் நான் காண்பேன் உயிர்த்தெழும் போது உம் சாயலால் திருப்தியாவேன்

1ம் சரணம்

தேவனே நீர் என் தேவன் அதிகாலமே தேடி வந்தேன் நீரின்றி வறண்ட நிலம்போல் ஏங்குகிறேன் தினம் உமக்காய் அல்லேலுயா ஓசன்னா

2ம் சரணம்

ஜீவனை விட உம் அன்பு அது எத்தனை நல்லது புகழ்ந்திடுமே, என் உதடு மகிழ்ந்திடுமே, என் உள்ளம்

3ம் சரணம்

உயிர்வாழும் நாட்களெல்லாம் உம் நாமம் சொல்லித் துதிப்பேன் அறுசுவை உண்பது போல திருப்தியாகும் என் ஆன்மா

4ம் சரணம்

படுக்கையிலே உம்மை நினைப்பேன் இராச்சாமத்தில் தியானம் செய்வேன் துணையாளரே, உம் நிழலை தொடர்ந்து, நடந்து வளர்வேன்.

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.