உள்ளங்கை நடுவில் உங்களைக் கண்டேன்
Negnsam Agnsavaentaam
நெஞ்சமே வீணாய் சோர்ந்துபோகாதே தஞ்சம் இயேசு இருக்கையில் தளர்ந்து விடாதே
சோதனை பலவாய் சூழ்ந்திடும் நேரம் வேதனை விதம் விதம் வந்திடும் காலம் தீதனைத்தும் திரு சிலுவையில் தொங்கும் நாதனை நினைத்திடில் நாசமாய்போகும்
குஷ்டங்கள் வருங்கால் களிப்பாக எண்ணு இஷ்டமுடன் ஜெபம் எந்நேரம் பண்ணு நஷ்டங்கள் வந்தாலும் நலமென்று சொல்லு துஷ்டனின் சூழ்ச்சியைத் தூயனால் வெல்லு
பெற்றவரும் பெண்டு பிள்ளைகளும் – மிக உற்றவரும் உயிர் தோழரானோரும் பற்றற்றவராய் பழகிடும் போதும் மற்றவர் செய்கையால் மனங்கலங்காதே
செய்ததும் இல்லென்று மறுப்பார் சொல்லாதும் செய்யாதும் ஆம் என்று சொல்வார் பொய்யிலும் புரட்டிலும் புதைந்தது உலகம் மெய்யுடையான் இயேசு மீது வை பாரம்
நியாயமில்லாமல் குற்றம் காண்போர்கள் நியாயத்தீர்ப்பின் நாள் வெட்கம் கொள்வார்கள் தூயவன் முன் உன் சிறு இருதயம் மாயமும் மாசுமில்லையெனில் போதும்
இயேசுவின் சிந்தையிருந்திட வேண்டும் இயேசுவின் ஆவியில் இயங்கிட வேண்டும் இயேசுவைப் போல் எல்லாம் சகித்திட வேண்டும் இயேசுவின் கிருபையை பெற்றட வேண்டும்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.