TA-1768
Tamil

Nesikkiren ummai thaane

Nesikkiren ummai thaane

17
views
பல்லவி

நேசிக்கும் நேசர் இயேசு உன்னை காத்து நடத்திடுவார் கலங்காதே திகையாதே கர்த்தர் இயேசு உண்டு

1ம் சரணம்

உன்னதங்களிலே வாசம் செய்யும் உன்னதமான தேவன் உண்டு உந்தன் கவலையை அவரிடம் சொன்னால் உடனே பதிலளிப்பார் – உனக்கு

2ம் சரணம்

பாரினில் உழலும் பாவியாம் உனக்கு பரிந்து பேசும் இயேசு உண்டு பரன் பாதம் தேடியே வந்தால் பரிவாய் பதிலளிப்பார்

3ம் சரணம்

அன்பாக உன்னை நன்றாக நடத்தும் இன்ப தேவ ஆவி உண்டு துன்ப சுமைதனை அவர் பாதம் வைத்தால் கனிவாய் பதிலளிப்பார்

4ம் சரணம்

வானமும் பூமியும் நிலைமாறினாலும் என்றும் மாறா வார்த்தை உண்டு அதிகாலையில் அவர் முகம் கண்டால் அன்பாய் பதிலளிப்பார்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.