♪♫
TA-1770
Tamil
Nigarilla Thiru Ira
Nigarilla Thiru Ira
0
views
பல்லவி
நிலையில்லாத உலகில் நிரந்தரம் நீரே அய்யா - 2 தகப்பனே தகப்பனே நிரந்தர தகப்பனே - 2
1ம் சரணம்
மாறிடும் உலகிலே மறந்திடா நேசமே தோள்களில் சுமந்திடும் கைவிடா கிருபையே என்ன நேர்ந்தாலும் என்னை விட்டுப் போகாதவர் யார் வெறுத்தாலும் நீர் என்னை வெருக்காதவர் - 2 தகப்பனே தகப்பனே நிரந்தர தகப்பனே - 2
2ம் சரணம்
களிமண்ணாம் என்னையும் உம் கரங்களால் வனைந்தீரே விலையேறப்பெற்ற இயேசுவை எனக்குள்ளே வைத்தீரே நான் உடைந்தாலும் மீண்டும் என்னை வனைபவரே என்னை உயர்வான ஸ்தானத்தில் வைப்பவரே குயவனே குயவனே வணைந்திடும் குயவனே - 2 - நிலையில்லாத உலகில் நிரந்தரம் நீரே அய்யா - 2 தகப்பனே தகப்பனே நிரந்தர தகப்பனே - 2