ஞானஸ்நான மா ஞானத்திரவியமே திரு
Nyanasnana Ma Nyanathiraviyame
ஓ பெத்லெகேமே சிற்றூரே என்னே உன் அமைதி! அயர்ந்தே நித்திரை செய்கையில் ஊர்ந்திடும் வான் வெள்ளி, விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே உன் வீதியில் இன்றே; நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம் உன் பாலன் இயேசுவே.
கூறும், ஓ விடி வெள்ளிகாள்! இம்மைந்தன் ஜன்மமே; விண் வேந்தர்க்கு மகிமையே, பாரில் அமைதியாம்; மா திவ்விய பாலன் தோன்றினார் மண் மாந்தர் தூக்கத்தில், விழித்திருக்க தூதரும் அன்போடு வானத்தில் .
அமைதியாய் அமைதியாய் விண் ஈவு தோன்றினார்; மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும் அமைதியாய் ஈவார்; கேளாதே அவர் வருகை இப்பாவ லோகத்தில்; மெய் பக்தர் ஏற்பார் ஸ்வாமியை தம் சாந்த ஆன்மாவில்.
வேண்ட நற் சிறு பாலரும் இத் தூய பாலனை, அழைக்க ஏழை மாந்தரும் இக்கன்னி மைந்தனை; விஸ்வாசமும் நம் பாசமும் வரவை பார்க்கவே, இராவை நீக்கித் தோன்றுவார் இம்மாட்சி பாலனே.
பெத்லெகேம் தூய பாலனே, இறங்கி வருவீர்; ஜனிப்பீர் எங்களில் இன்றும் எம் பாவம் நீக்குவீர்; நற்செய்தி இவ்விழா தன்னில் இசைப்பார் தூதரே; ஆ வாரும், வந்து தங்கிடும் இம்மானுவேலரே.