ஓ ஸ்திரீ வித் தேசையா
Oh Sthiri Vith
ஒளிதரும் தீபங்கள் சுடர் வீசும் தீபம் நாம் கலங்கரை விளக்கைப் போல் இயேசுவின் ஒளி தருவோம்
மலைமேல் ஜொலித்திடும் மாநகர் போலவே மண்ணகம் காணவே ஒளியினை வீசுவோம்-ஆண்டவர் இயேசுவின் உறவினில் எரிந்திட அணையாத ஜோதியாய் சுடரை வீசுவோம்
இருளை நீக்கிட ஒளியாய் வந்தவர்-அருள் நிறை ஒளியினை மேதினில் வீசுவோம் வார்த்தையை பிடித்துமே சுடர்களை போலவே எழும்பி பாரினில் சுடரை வீசுவோம்
அழிவின் பாதையில் கல்லறை சென்றிடும் ஆயிரம் ஆயிரம் தரிசனம் காணுவோம் சுவிசேஷ ஒளியினை யாவரும் கண்டிட துணிந்து என்றென்றுமாய் சேவையை செய்குவோம்
பரிசுத்தவான்களே ஒளியின் வாசமே சாட்சியின் ஜீவியம் எங்கும் வீசிட இயேசுவின் ஒளியினை பாரில் வீசியே ஓளியின் பிள்ளையைப் போல் சீராய் வாழுவோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.