TA-1791
Tamil

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

Oru Vaarthai Sollum

0
views
பல்லவி

எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமையாகும் இயேசைய்யா – 2 வறண்ட நிலங்களை வயல்வெளி ஆக்கிடுவீர் – 2 பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனை ஆக்கிடுவீர் உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2

1ம் சரணம்

இருண்ட உலகினிலே ஒளியைத் தந்தவரே பாவத்தின் இருளினிலே வாழ்வோரை மீட்டிடுமே – 2

2ம் சரணம்

மரித்த லாசருவை உயிர்பெறச் செய்தவரே எங்கள் தேசத்தையே (சபைகளையே) உயிர்பெறச் செய்யும் ஐயா – 2

3ம் சரணம்

அக்கினி இறங்கிடட்டும் அற்புதம் நடந்திடட்டும் கர்த்தரே தெய்வம் என்று தேசங்கள் அறிந்திடட்டும் – 2