TA-1794
Tamil

விதவையின் மகனை தொட்டீர் உயிர் பெற்றான்

Oru varthai sollum sugam

20
views
பல்லவி

ஒரு போதும் மறவாத உண்மை பிதா இருக்க உனக்கென்ன குறை உண்டு? மகனே! சிறுவந் தொட்டுன்னையொரு செல்ல பிள்ளை போல் காத்த உரிமை தந்தை என்றென்றும் உயிரோடிருப்பார் நம்பு

1ம் சரணம்

கப்பலின் அடித்தட்டில் களைப்புடன் தூங்குகிறார் கதறுமுன் சத்தம் கேட்டால் கடல் புசல் அமர்த்துவார் எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதம் ஈவார் ஏழைப்பிள்ளை எல்லார்க்கும் ஏற்ற தந்தை நான் என்பார்

2ம் சரணம்

கடல் தனக்கதிகாரி கர்த்தர் என்றறிவாயே கடவாதிருக்க எல்லை கற்பித்தார் அவர் சேயே விடுவாளோ பிள்ளையைத் தாய் மேதினியில் தனியே மெய்ப்பரனை நீ தினம் விசுவாதிருப்பாயே

3ம் சரணம்

உன் ஆசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமோ உறக்கமில்லாதவர் கண் உன்னை விட்டொழியுமோ இந்நிலமீதில் உனக்கென்ன வந்தாலும் சும்மா இருக்குமோ அவர்மனம் உருக்கமில்லாதேப் போமா

4ம் சரணம்

உலகம், பேய், உடல், ஆசை உன்னை மோசம் செய்யாது இலகும் பரிசுத்தாவி எழில்வரம் ஒழியாது என்றும் மாறாத நண்பன் ரட்சகர் உன்னோடுண்டு

5ம் சரணம்

சிலபோது தரித்திரத்தால் நோயால் வருந்துவார் சிட்சித்துருக்கினாலும் சிறந்த பொன்னாக்குவார் பல பாடுனக்குற்றாலும் பலன் பெற திருத்துவார் பட்சம் நிறைந்த கையால் முத்தி செய் திலங்குவார்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.