TA-1799
Tamil

நான் உம்மை நேசிக்கிறேன்

Ovvoru natkalilum piriyamal

16
views
1ம் சரணம்

ஓ இயேசுவே என்னை மூட இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ் பாவமும் நீங்கிப் போய்விட இரத்தத்தின் கீழ் வையும். இரத்தத்தின் கீழ் என்னை மூடும் குற்றங் குறை நீக்கி மாற்றிடும் நித்தமுமென்னைக் காத்திடும் இரத்தத்தின் கீழ் வையும்

2ம் சரணம்

ஆவியின் பூரணம் பெற இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ் ஆத்மாவின் சுத்தியைப் பெற இரத்தத்தின் கீழ் வையும்

3ம் சரணம்

இயேசுவே எந்தன் இன்பமாம் இரத்ததின் கீழ் இரத்தத்தின் கீழ் ஏக சமாதானம் பெற இரத்தத்தின் கீழ் வையும்

4ம் சரணம்

இடைவிடாமல் ஜெயித்திட இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ் எங்குமே சாட்சி அளித்திட இரத்தத்தின் கீழ் வையும்

5ம் சரணம்

என்றும் வேதத்தை வாஞ்சிக்க இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ் எல்லார்க்கும் வழி காண்பிக்க இரத்தத்தின் கீழ் வையும்

6ம் சரணம்

பாவிகள் பிரவேசித்து இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ் பாவத்தின் மேல் மீட்படைய இரத்தத்தின் கீழ் வையும்.

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.