TA-1801
Tamil

Paadham Raja Raja

Paadham Raja Raja

0
views
பல்லவி

பாதுகாப்பார் நெருக்கடியில் பதில் தருவார் ஆபத்திலே – 2 துணையாய் வருவார் உதவி செய்வார் – 2 கைவிடார் கைவிடார் – 2

1ம் சரணம்

நம் துதிபலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக்கொண்டார் – 2 நாம் செய்த நற்கிரியைகளை மறவாமல் நினைக்கின்றார் – 2 கைவிடார் கைவிடார் – 2

2ம் சரணம்

இதயம் விரும்புவதை நமக்கு தந்திடுவார் – 2 (நம்) ஏக்கங்கள் அனைத்தையும் செய்து முடித்திடுவார் – 2 கைவிடார் கைவிடார் – 2

3ம் சரணம்

மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் வரும் எழுப்புதல் நாம் காண்போம் – 2 நம் தேவன் நாமத்தினால் கொடியேற்றி கொண்டாடுவோம் – 2 கைவிடார் கைவிடார் – 2 பாதுகாத்தீர் நெருக்கடியில் பதில் தந்தீர் ஆபத்திலே – 2 துணையாய் வந்தீர் உதவி செய்தீர் – 2 நன்றி ஐயா நன்றி ஐயா – 2 துதிபலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக் கொண்டீர் – 2 நான் செய்த நற்கிரியைகளை மறவாமல் நினைக்கின்றீர் – 2 நன்றி ஐயா நன்றி ஐயா – 2