TA-1805
Tamil

நம் பாரதம் இயேசுவைக் காணும்

Paaratham Iyaesuvaik Kaanum

20
views
பல்லவி

பாவி யெனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே

1ம் சரணம்

தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய் தேவாதி தேவன் ஏகசுதன் படும் பாடுகள் எனக்காகவே

2ம் சரணம்

அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால் எப்படியும் உம் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே

3ம் சரணம்

இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே இம்மானுவேலன் உள்ளம் உருகியே வேண்டுதல் செய்தனரே

4ம் சரணம்

மும்முறை தரைமீதே தாங்கொண்ணா வேதனையால் முன்னவர் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே

5ம் சரணம்

அன்பின் அருள்மொழியால் ஆறுதல் அளிப்பவர் துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நெந்து அலறுகின்றார்

6ம் சரணம்

என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மாநேசத்தை எண்ணியெண்ணியே உள்ளங்கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.