♪♫
TA-1806
Tamil
பார்போற்றும் வேந்தன் பாரினில் வந்து
Paarpoerrum Vaenthan Paarinil
20
views
பல்லவி
பார்ப்பேனே என் நேசரை நான் ஆர்ப்பரிப்பேன் நானு மந்நாள் தீர்த்தார் என் கண்ணீர்கள் – யாவும் சாற்றுவேன் நான் துதியே துதியே
1ம் சரணம்
பாரில் எந்தன் பாவம் தீர்த்தார் பரத்தில் எந்தன் ஆவல் தீர்ப்பார் அகத்திலே சந்தோசமளித்தார் இகத்தி லென்றும் துதியே துதியே
2ம் சரணம்
ஆயிரங்களிற் சிறந்தோர் ஆத்துமாவின் நேசராவர் ஆபத்திலென் தோழனவர் நாமத்திற்கே துதியே துதியே
3ம் சரணம்
எண்ணிறந்த தூதர் கூட்டம் விண்ணினின்று போற்றும் நாளில் அண்ணல் இயேசுவின் அடிபணிந்தேன் பணிந்து சொல்வேன் துதியே துதியே
4ம் சரணம்
மண்ணின் சாயல் மாறியானும் மகிமை யேறி மாசாற்றோனாய் மன்னனோடு மணவறையில் மகிழ்வேன் என்றும் துதியே துதியே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.