TA-1807
Tamil

பரலோகத்தில் ஓர் இடம் நீ பெற வேண்டும்

Paava Mannipin

24
views
1ம் சரணம்

பாவ நாசர் பட்ட காயம் நோக்கி தியானம் செய்வது ஜீவன், சுகம், நற்சகாயம், ஆறுதலும் உள்ளது.

2ம் சரணம்

ரத்த வெள்ளம் பாய்ந்ததாலே அன்பின் வெள்ளம் ஆயிற்று; தெய்வ நேசம் அதினாலே மானிடர்க்குத் தோன்றிற்று.

3ம் சரணம்

ஆணி பாய்ந்த மீட்பர் பாதம் தஞ்சம் என்று பற்றினேன்; அவர் திவ்ய நேச முகம் அருள் வீசக் காண்கிறேன்.

4ம் சரணம்

பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி துக்கத்தால் கலங்குவேன்; அவர் சாவால் துக்கம் மாறி சாகா ஜீவன் அடைவேன்.

5ம் சரணம்

சிலுவையை நோக்கி நிற்க, உமதருள் உணர்வேன்; தீர்த்த ரத்தம் நெஞ்சில் பட, சமாதானம் பெறுவேன்.

6ம் சரணம்

அவர் சிலுவை அடியில் நிற்பதே மா பாக்கியம்; சோர்ந்த திரு முகத்தினில் காண்பேன் திவ்விய உருக்கம்.

7ம் சரணம்

உம்மை நான் கண்ணாரக் காண விண்ணில் சேரும் அளவும், உம்மை ஓயா தியானம் செய்ய என்னை ஏவியருளும்.

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.