TA-1810
Tamil

Paavam Seyyaathae Nee

Paavam Seyyaathae Nee

20
views
பல்லவி

பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை நின் கிருபை பிரவாகத்தால் தேற்றிடும் ஏசு நாதா – 2

1ம் சரணம்

கெட்ட குமாரனைப் போல் துஷ்டனாய் அலைந்தேன் அப்பா நின் அன்பை உணராமல் துரோகம் நான் செய்தேனே

2ம் சரணம்

கள்ளனாயினும் நான் நீர் பெற்ற பிள்ளை அல்லோ கள்ளனுக்கருள் செய்த நீ தள்ளாதே சிலுவை நாதா

3ம் சரணம்

தந்தையை விட்ட பின்பு தவிடு தான் ஆகாரமோ மனம் கசிந்து நொந்தேன் கண்ணீரை துடைத்திடுமே

4ம் சரணம்

தந்தை தாய் தாமரெல்லாம் என்னைக் கைவிடுவார்கள் சாகும் நாளில் தாங்குவார் நீர் அல்லால் யாருமில்லை

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.