♪♫
TA-1813
Tamil
பாவி நான் என்ன செய்வேன் கோவே
Paavi naan enna seiven
18
views
பல்லவி
பாவி நான் கிருபை காட்டும் மீண்டும் ஓர் தருணம் தாரும் சுயத்தை முற்றும் வெறுத்துவிட்டு உண்மையாய் உந்தன் வழிநடக்க
1ம் சரணம்
பாதை தோறும் வேதம் ஏந்தி பரிசுத்தன் என்று காட்டுகின்றேன் வேதம் காட்டும் பாதை செல்ல உள்ளமே இன்றி வாழ்கின்றேன்
2ம் சரணம்
கள்ளர் அடித்து மடியும் மனிதன் பாதை ஓரம் கிடக்கும்போது என்னைக் காத்தால் போதும் என்று ஒதுங்கி ஒதுங்கி ஓடுகின்றேன்
3ம் சரணம்
ஆயிரம் ஆயிரம் ஜாதிகள் வாழும் இந்திய தேசம் மீட்பைக் காண நித்தம் உந்தன் சத்தம் கேட்டும் பித்தன் போல வாழ்கிறேன்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.