பாவ சேற்றில் இருந்த என்னை
Parisuthar Yesu Ennai
பரிசுத்தர் ஏசு உயிர்த்தெழுந்தார் புகழ் செலுத்தி மகிழ்வோம் அன்றதிகாலை மூன்றாம் நாளில் சொன்னபடி எழுந்தார்
சடுதி பூமி அதிர்ந்ததே சரீரம் வைத்த கல்லறை அற்புதமாகத் திறந்திடவே ஆண்டவர் ஏசு உயிர்த்தெழுந்தார் தேவனின் வல்ல செயலிதுவே தேவனால் கூடாத தொன்றில்லை கலங்கிடாமல் நம்பிடுவோம் கைவிடமாட்டார் கடைசிவரை
அழிவைக் காணார் பரிசுத்தர் அகாத பாதாளம் வென்றார் பூமியிலே தாழ்விடங்களிலே புண்ணிய ரேசு இறங்கினாரே சிறைப்பட்டவரை சிறையாக்கி சிறந்த வரங்கள் அளித்தாரே வானாதி வானம் ஏறினாரே வலது பாரிசம் வீற்றிடவே
புதிய ஜீவ மார்க்கமாய் பரமதேவ சந்நிதி பரிந்து பேச எமக்காக பூரண மீட்பை நாம் அடைய மெல்கிசேதேக்கின் முறைப்படியே மா பரிசுத்த ஸ்தலமதிலே மகா பிரதான ஆசாரியர் மன்னன் கிறிஸ்து பிரவேசித்தார்
பரிசுத்தாவி பெலத்தினால் மரித்தவர் எழுந்தாரே சரீரமாம் தம் திருச்சபை மேல் ஆவியாய் தேவன் இறங்கிடவே ஆவியால் தேகம் நிரம்பிடுதே அகமதில் உலாவுகின்றார் ஆனந்த பாக்கியம் அடைகிறோமே
பரம சீயோன் சேருவோம் மரணமோ நம் ஜீவனோ கடைசி நேரம் கேட்டிடுவோம் காகள சத்தம் முழங்கிடுமே கிறிஸ்துவுக்குள்ளே மரித்தவர்கள் கல்லறை திறக்க எழும்பிடவே மறுரூபம் கண்ணிமைப் பொழுதே மகிமை அடைந்தே பறந்து செல்வோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.