♪♫
TA-1832
Tamil
Parisuththa Aaviyae Vaarumaiyaa
Parisuththa Aaviyae Vaarumaiyaa
21
views
1ம் சரணம்
பரிசுத்தமான பரமனே என்னை பாத்திரம் ஆக்கிடுமே பரம தரிசனம் தாருமே தேவா பரிசுத்தமாக்கிடுமே கர்த்தருக்குப் பரிசுத்தம் கருத்துடன் நெற்றியிலே பதித்திட உதவி செய்யும் பரமனே சுத்தமாக்கும்
2ம் சரணம்
அந்தரங்க வாழ்க்கையில் பரிசுத்தம் காண அடிமைக்கு உதவி செய்யும் இரகசியப் பாவங்கள் வெறுத்திட எனக்கு இரங்கிடும் இந்நேரமே
3ம் சரணம்
பொது வாழ்வில் என்னைப் பரிசுத்தமாக காத்திட உதவி செய்யும் நாள்தோறும் என் வாழ்வில் உம்மையே உயர்த்த பரிசுத்தம் தந்திடுமே
4ம் சரணம்
தூசியை உதறிவிட்டெழுந்திட எனக்கு தூயனே துணை செய்குவீர் வல்லமை தரித்து வாழ்ந்திட இன்று உம் ஆவி தந்திடுமே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.