TA-1836
Tamil

பாதாளம், விண், மண் யாவிலும்

Pathaalm Vin Man Yaavilum

19
views
பல்லவி

மன்னருள் மன்னவனே நன்றியால் துதிப்பேனே என்னையும் புயங்களால் சுமந்தீரே

1ம் சரணம்

பறந்து காத்திடும் பட்சியைப் போல் விரைந்தீர் என்மேல் நீர் ஆதரவாய் சூழ்ந்தீரே எனையுமே அக்கினிமதில் போல் தீங்கினால் துயருறேன் ஓர் நாளுமே

2ம் சரணம்

வானத்தின் பலகணிகள் திறந்தே வர்ஷியும் என்னில் ஆசீர்வாதங்கள் வஸ்திரத் தொங்கலால் ஆலயம் நிறைத்தீர் வாரும் என் தேவா என்னை நிறைத்திட

3ம் சரணம்

நாதா நின் அடிகளை நான் தொடர நானில மீதெங்கும் சாட்சியாக ஆவியின் பெலமதை இரட்டிப்பாய் ஈயுமே ஜீவனும் அருமையாய் எண்ணிடேனே

4ம் சரணம்

உம் சித்தம் போல் நடத்தும் தேவனே என்னிடை கட்டும் தூய ஆவியே சித்தமாய் நீர் நடத்தும் வழியேகியே சுத்தாங்கம் அடைந்திட வாஞ்சிக்கிறேன்

5ம் சரணம்

உதித்திடும் வானில் விடிவெள்ளியே அதிகாலையும் இதோ வந்திடுதே சீக்கிரம் தீருமே பத்து நாள் பாடுகள் சிருஷ்டிகரே நீரே என் நாயகரே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.