♪♫
TA-1837
Tamil
பயந்து கர்த்தரின் பாதை யதனில்
Payanthu Kartharin Paathai
24
views
பல்லவி
பெலனற்ற பாத்திரம் நானே பழுதடைந்தேன் பல முறை நானே உம் கரம் தொட்டென்னை வனையும் உலகுக்கு உப்பாக மாற்றும் பரமனே பரமனே பல முறை வீடிநந்தேனே தேவனே தேவனே தேற்றியே மீட்டிடுமே
1ம் சரணம்
தனிமையில் வெறுமையில் தவிக்கையில் தவறான எண்ணங்கள் ஆட்கொள்கையில் தாவீதின் மனதை மாற்றியவர் தயவாக என்னையும் உம் சாயலாக்குமே!
2ம் சரணம்
வேதனை வெறுப்பில் வாடுகையில் வழியொன்றும் அறியாது அலைபாய்கையில் வனாந்திர வழியில் காத்தவரே வழியினைக் காட்டும் என் மாலுமியே!
3ம் சரணம்
சோதனை சோர்வில் வீழ்கையில் பேதுருபோல் தவறிடும் வேளைகளில் சமயத்தில் மீட்டிடும் வல்லவரே சாட்சியாய் மாற்றும்என்வாழ்வினையே!
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.