TA-1838
Tamil

பேரன்பர் இயேசு நிற்கிறார்

peeranpar iyeechu nirrkirraar

25
views
பல்லவி

பேரன்பர் இயேசு நிற்கிறார் நாம் அண்டிக் கொள்ளுவோமே கடாட்சமாகப் பார்க்கிறார் நல் நாமம் போற்றுவோமே

1ம் சரணம்

விண்ணில் மேன்மை பெற்றதே மண்ணோர் இன்பமாகலே பாடி போற்றும் நாமமே ஏசு என்னும் நாமமே

2ம் சரணம்

உன் பாவம் யாவும் மன்னித்தேன் அஞ்சாதே என்கிறாரே சந்தேகங் கொண்டு சோர்வதேன் மெய்ப்பாக்கியம் ஈகிறாரே

3ம் சரணம்

நல் மீட்பர் யாவர் போரிலும் காடட்சம் வைக்கிறாரே தம்மண்டை சிறியோரையும் தள்ளாமல் சேர்க்கிறாரே

4ம் சரணம்

மா மேன்மை ஏசு நாதர்க்கே நம்மால் உண்டாவதாக ரடசண்ய கிரியைக்காகவே நாம் வாழ்த்தல் செய்வோமாக

5ம் சரணம்

ரட்சண்ய வல்ல நாமத்தால் விசாரம் நீங்கிப் போகும் அவ்வின்ப நாமம் கேட்பதால் சந்தோஷமும் உண்டாகும்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.