TA-1841
Tamil

பிறந்தார் பாலகன்

Piranthar Palagan

20
views
பல்லவி

பிறந்தார் பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார்

1ம் சரணம்

மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார் மா தேவ தேவனே மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார் மா தியாகியாய் வளர்ந்தார்

2ம் சரணம்

பாவ உலக மானிடர் மேல் பாசம் அடைந்தவரே மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய் மா ஜோதியாய்த் திகழ்ந்தார்

3ம் சரணம்

பொறுமை தாழ்மை அன்புருக்கம் பெருந்தன்மை உள்ளவரே மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால் மேலான நாமம் பெற்றார்

4ம் சரணம்

கந்தைத் துணியோ கர்த்தருக்கு கடும் ஏழ்மைக் கோலமதோ விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும் வீண் ஆசையும் நமக்கேன்

5ம் சரணம்

குருவைத் தொடரும் சீஷர்களும் குருபோல மாறிடுவார் அவர் நாமம் தரித்தவர் யாவருமே அவர் பாதையில் நடப்போம்

6ம் சரணம்

இயேசு பிறந்தார் உள்ளமதில் இதை எங்கும் சாற்றிடுவோம் புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல பரன் ஆவியில் மகிழ்வோம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.