TA-1842
Tamil

துதிப்போம் அல்லேலூயா

Pirapu Iyaesuvai Thuthiththituvoem

21
views
பல்லவி

இயேசு வருகிறார் பிரதான தூதன் எக்காளம் முழங்க பரமன் இயேசு வருவார் சாயங்காலத்திலோ நடுராவினிலோ சேவல் கூவிடும் நேரத்திலோ அதிகாலையிலோ எந்த வேளையிலோ பரமன் இயேசு வருவார்

1ம் சரணம்

இருவர் வயலில் இருப்பார் இரண்டு ஸ்திரிகள் எந்திரம் அரைப்பார் ஒருவர் கைவிடப்படுவார் ஏற்றுக்கொள்ளப்படுவார் ஒருவர்

2ம் சரணம்

நோவா காலத்தின் சம்பவம்போல் நடந்திடும் அந்த நாட்களிலே புசித்தும் குடித்தும் பெண்கொண்டும் பலர் அசந்து வெறித்திருப்பார்

3ம் சரணம்

லௌகிகக் கவலைகளினாலும் இலட்சை மிகுந்த வெறியினாலும் எம் இதயம் பாரமடையாமல் எச்சரிக்கையுடன் காத்திருப்போம்

4ம் சரணம்

இரவும் பகலும் விழிப்பாய் இருதயம் நொருங்கி ஜெபிப்போம் கற்புள்ள கன்னிகையாக நாமும் கர்த்தர் வருகைக்குக் காத்திருப்போம்

5ம் சரணம்

தவிக்கும் உலகம் அந்த நாளில் தலைகளை உயர்த்தி நடப்போம் வருகை நெருங்க கர்த்தர் இயேசு வாசற்படியில் வந்து நிற்கிறார்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.