பொக்கிஷம் சேர்த்திடுங்கள் பரத்திலே
Pokkisam Serthidungal Parathilae
பொல்லாப்பு நிறைந்திருந்த உலகிலே இயேசு வந்து பிறந்திட்டார் பெத்லேயிலே ஆதரவு இல்லாத வேளையிலே மெய்ப்பர்கள் வெளிச்சத்தைக் கண்டனரே மரியாளின் மைந்தனாக பிறந்தாரே யோசேப்பு மனமகிழ்ந்து துதித்தாரே இரட்சிப்பின் தேவனாக வந்தாரே மன்னாதி மன்னன் இயேசு உதித்தாரே அவர் மகிமைதனை சொல்லி பாடுவோம் கரங்களைத் தட்டி அவரைப் போற்றி துதிப்போம் நாள்தோறும் அவர் சமூகம் நாடுவோம் அவர் அன்பினிலே என்றென்றும் நிலைத்திருப்போம்
மனதுருகும் தெய்வம் அவர் பிறந்திட்டார். உன் கஷ்டபார வேதனையை மாற்றுவார் கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டு எழுந்து வா உன்னை களிப்பாக மாற்ற அவர் பிறந்திட்டார்
கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் உள்ளங்கைகளிலே உன்னை அவர் வரைந்திட்டார் நீ கலங்காதே திகையாதே எழுந்து வா கண்மணி போல் காக்கும் இயேசு அவர் பிறந்திட்டார்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.