♪♫
TA-1845
Tamil
Ponnum Illa
Ponnum Illa
0
views
1ம் சரணம்
பூலோகத்தின் மீட்பர் சிங்காசனம் ஏறி, செங்கோலுஞ் செலுத்த மெய்யாய் வருவார்; மெய்த் தாசர் இப்போது இச்செய்தியைக் கூறி, பூவெங்கும் பிரஸ்தாபிக்கின்றார்.
2ம் சரணம்
தேசா தேசமாக அந்தந்த ஜனங்கள் ராஜாக்களும் கூட பேரானந்தமாய்; ஒரே கூட்டமாக வந்தாராதிப்பார்கள் நன் மீட்பரை வணக்கமாய்
3ம் சரணம்
பூலோகத்தார் யாரும் விண்ணோர்களைப் போலே மாசற்ற சுத்தாங்கராய்த் தொண்டு செய்வார்; சங்கீதங்கள் பாடி, மகா களிப்போடே ஆனந்த கெம்பீரங் கொள்வார்
4ம் சரணம்
பூலோகத்தின் மீட்பர் சிங்காசனம் ஏறி செங்கோலுஞ் செலுத்த மெய்யாய் வருவார்; விண்ணோரும் மண்ணோரும் சங்கீர்த்தனம் கூறி முன்பின் சேனையாய்ப் பணிவார்.