TA-1850
Tamil

பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா

Porutkal Mela

20
views
பல்லவி

பொருட்கள் மேல கண்ணு போச்சுனா போச்சய்யா உன் அபிஷேகம் ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னான அப்போதான் உன் அபிஷேகம் காத்துக் கொள் காத்துக் கொள் –நீ பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை காத்துக்கொள்

1ம் சரணம்

பெருமை என்ற வலையில் விழாதே அது வறுமையைக் கொண்டு வந்திடும் பணத்திலே மயங்கி விடாதே –உன்னைப் பாதாளம் கொண்டு போய்விடும்

2ம் சரணம்

அழிந்து போகும் உலகப்பொருட்களால் நண்பர்களை சம்பாதித்துக் கொள் நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை) நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்

3ம் சரணம்

அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம் அழைத்தவர் உண்மையுள்ளவர் அநுதினமும் நடத்திச் செல்வாரே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.