♪♫
TA-1857
Tamil
Puthu kirubai
Puthu kirubai
0
views
பல்லவி
புது கிருபை தந்தென்னை நடத்தி செல்லுமே உமக்காக வாழ்ந்திட புது பெலனை தந்தென்னை நடத்தி செல்லுமே உமக்காக ஓடிட – 2 கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே துதிகன மகிமைக்கு பாத்திரரே கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே உம்மை பாடிப்பாடி போற்றிபோற்றி என் இதயம் மகிழுதே
1ம் சரணம்
ராஜா உம்மை உயர்த்திடுவேன் உம் நாமத்தை ஸ்தோத்தரிப்பேன் நாள்தோறும் ஸ்தோத்தரிப்பேன் என்றென்றும் துதித்திடுவேன் – 2
2ம் சரணம்
கர்த்தாவே நீர் பெரியவரே புகழப்பட தக்கவரே உம்முடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாதது – 2