TA-1865
Tamil

இராஜாதி ராஜா

Raajaathi Raajaa Sthoethiramae

22
views
1ம் சரணம்

ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் தம் மந்தை காத்தனர்; கர்த்தாவின் தூதன் இறங்க, விண் ஜோதி கண்டனர்.

2ம் சரணம்

அவர்கள் அச்சங்கொள்ளவும் விண் தூதன்: திகில் ஏன்? எல்லாருக்கும் சந்தோஷமாம் நற்செய்தி கூறுவேன்.

3ம் சரணம்

தாவீதின் வம்சம் ஊரிலும் மெய் கிறிஸ்து நாதனார் பூலோகத்தார்க்கு ரட்சகர் இன்றைக்குப் பிறந்தார்.

4ம் சரணம்

இதுங்கள் அடையாளமாம், முன்னணைமீது நீர் கந்தைபொதிந்த கோலமாய் அப்பாலனைக் காண்பீர்.

5ம் சரணம்

என்றுரைத்தான்; அக்ஷணமே விண்ணோராம் கூட்டத்தார் அத்தூதனோடு தோன்றியே கர்த்தாவைப் போற்றினார்.

6ம் சரணம்

மா உன்னதத்தில், ஆண்டவா, நீர் மேன்மை அடைவீர்; பூமியில் சமாதானமும் நல்லோர்க்கு ஈகுவீர்.

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.