TA-1869
Tamil

இராஜா

Raja Um Maligaiyil

23
views
பல்லவி

ராஜா உம் பிரசன்னம் போதுமையா எப்போதும் எனக்குப் போதுமையா பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்

1ம் சரணம்

அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமாய் நாடுகிறேன்

2ம் சரணம்

உலகமெல்லாம் மாயையையா உம் அன்பொன்றே போதுமையா

3ம் சரணம்

இன்னும் உம்மை அறியணுமே இன்னும் கிட்டி சேரணுமே

4ம் சரணம்

கரம் பிடித்த நாயகரே கைவிடாத தூயவரே

5ம் சரணம்

ஆட்கொண்ட அதிசயமே ஆறுதலே அடைக்கலமே

6ம் சரணம்

துதியினிலே வாழ்பவரே துணையாளரே என் மணவாளரே

7ம் சரணம்

அநாதி தேவன் அடைக்கலமே அவர் புயங்கள் ஆதாரமே

8ம் சரணம்

சகாயம் செய்யும் கேடகமே மகிமை நிறை பட்டயமெ

9ம் சரணம்

சீர்படுத்தும் சிருஷ்டிகரே ஸ்திரப்படுத்தும் துணையாளரே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.