♪♫
TA-1871
Tamil
வந்தாரே தேடி வந்தாரே
Rajathai rajavai
0
views
1ம் சரணம்
ராஜாதி ராஜாவே, உம்மைத் துதிப்பதே ஆனந்தமாம்; தேவகுமாரன் நீர் யாவையும் படைத்தீர் எப்போதும் ஆளுவீர் விண், மண் எல்லாம்.
2ம் சரணம்
அநாதி ஜோதியே, கார் இருள் நீக்கவே விளங்கினீர்; நெஞ்சில் ப்ரகாசியும், மருளைப் போக்கிடும் அன்பும் சந்தோஷமும் தந்தருள்வீர்.
3ம் சரணம்
வல்ல சகாயரே நீர் எங்கள் நெஞ்சிலே தரித்திரும்; சாத்தானின் சோதனை எதிர்க்க வல்லமை கொடுத்து எங்களைக் காத்தருளும்.
4ம் சரணம்
அன்புள்ள யேசுவே, பூரணமாகவே மீட்டருளும் ; இனிமேல் மோட்சத்தை அடைந்து இன்பத்தைப் பெறவே எங்களைக் கடாட்சியும்.