இரத்தக்
Ratha Kottai Kulle
தேவ ராஜ்யம் ஓங்கவே பாவ மக்கள் மீளவே தியாகப் பரிசுத்தராய் சேவை செய்குவோம்
ஜாதி மதப் பேதம் முற்றும் நீங்கிட ஜோதியாய்ப் பிறந்து லோகப் பாவம் போக்கிட கல்வாரியில் மரித்தே உயிர்த்தெழுந்த கர்த்தரின் நற்செய்தி சாற்றுவோம்
நாடு, நகரமோ, காடு மலையோ நாடித் தேடி ஓடியே நல் ஊழியம் செய்வோம் மாண்டழியும் மக்கள் மேல் மனதுருகி கண்டறிந்த சாட்சி கூறுவோம்
தாகமோ, பசியோ நோக்கிடாமல் லோக, இன்ப துன்பமோ நெருங்கிடாமலே முன் வைத்த காலையும் பின் வைத்திடாமலே இன்னமும் முன்னேறி சேவிப்போம்
உன்னத அழைப்பை என்றும் காத்திட ஊக்கமாய் உறுதியாய் தகுதி பெற்றிட ஆவியிலே அனலாய் நிலை நின்றிட ஆண்டவர் அருள் பொழிகுவார்
சுத்த ஜீவியம் நற்சாட்சி பெறுவோம் சத்திய வழி நடக்கும் பக்தி நாடுவோம் வாக்கு வரம் வல்லமை அடைந்திடுவோம் வல்ல விசுவாச சேவையில்
பிரதி பலன் ஏந்தி ஏசு வருவார் பாடுபட்ட பக்தரோடு நாமும் சேருவோம் ஆதிப்பிதாக்களுடன் ரத்த சாட்சிகள் ஆர்ப்பரித்துக் கூடி வாழுவோம்pt?1 இரத்த சாட்சிக் கூட்டம் சத்ய பாதையில் நித்தந் தம்மைத் தத்தஞ் செய்து வீர சேவையில் ஜீவன் சுகம் பெலன் யாவையும் ஈந
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.