ரெகொபோத் என் வாக்குத்தத்தமே
Rehoboth – Neer Nallavar
இரட்டிப்பான நன்மைகள் தந்திட இயேசு வாக்களித்தாரே முன் மாரி மேல் பின் மாரி மழையே உன்னதத்தினின்று வந்திறங்குதே
பெலத்தின் மேலே மா பெலனே புது பெலன் நாம் பெற்றிட சால்வை தனை எலிசா அடைந்தாற்போல் சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம்
கிருபையின் மேல் மா கிருபை கர்த்தரிடம் நாம் பெற்றிட ஸ்திரீகளுக்குள் மரியாள் பெற்ற பாக்யம் ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம்
ஜெயத்தின் மேலே மா ஜெயமே ஜெய தொனியாய் பெற்றிட போர் முனையில் சிறு தாவீது போல போர் வீரராக என்றும் ஜெயிப்போம்
நம்பிக்கையின் மேல் நம்பிக்கை நல் விசுவாசம் பெற்றிட ஆதி அப்போஸ்தலர் காலம் கடந்த அற்புதங்கள் நாம் என்றும் காணுவோம்
பரிசுத்தம் மேல் பரிசுத்தம் பங்கமில்லாமல் பெற்றிட நீதியின் சூரியன் ஏசுவுடனே நீதி அணிந்து என்றும் ஆளுவோம்
மகிமையின் மேல் மா மகிமை மறு ரூபம் நாம் பெற்றிட கண்ணிமை நேரத்திலே பறந்தேகி கர்த்தருடன் நாம் என்றும் வாழுவோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.