TA-1879
Tamil

Sabaiyae Yeaga Siththathai

Sabaiyae Yeaga Siththathai

23
views
1ம் சரணம்

சபையின் அஸ்திபாரம் நம் மீட்பர் கிறிஸ்துவே ; சபையின் ஜன்மாதாரம் அவரின் வார்த்தையே ; தம் மணவாட்டியாக வந்ததைத் தேடினார், தமக்குச் சொந்தமாக மரித்ததைக் கொண்டார்.

2ம் சரணம்

எத்தேசத்தார் சேர்ந்தாலும் ; சபை ஒன்றே ஒன்றாம் ; ஒரே விஸ்வாசத்தாலும் ஒரே ரட்சிப்புண்டாம் ; ஒரே தெய்வீக நாமம் சபையை இணைக்கும் ; ஓர் திவ்விய ஞானாகாரம் பக்தரைப் போஷிக்கும்

3ம் சரணம்

புறத்தியார் விரோதம் பயத்தை உறுத்தும் ; உள்ளானவரின் துரோகம் கிலேசப்படுத்தும் பக்தர் ஓயாத சத்தம், `எம்மட்டும்’ என்பதாம் ; ராவில் நிலைத்த துக்கம் காலையில் களிப்பாம்

4ம் சரணம்

மேலான வான காட்சி கண்டாசீர்வாதத்தை பெற்று, போர் ஓய்ந்து வெற்றி சிறந்து மாட்சிமை அடையும் பரியந்தம் இன்னா உழைப்பிலும் நீங்காத சமாதானம் மெய்ச்சபை வாஞ்சிக்கும்

5ம் சரணம்

என்றாலும் கர்த்தாவோடு சபைக்கு ஐக்கியமும் இளைப்பாறுவோரோடு இன்ப இணக்கமும் இப்பாக்கிய தூயரோடு கர்த்தாவே, நாங்களும் விண் லோகத்தில் உம்மோடு தங்ககக் கடாட்சியும்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.