சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
Samathaanam othum
சமாதானப் பிரபு பிறந்தார் - 2 சத்தியத்தின் சாட்சியாக யார் இவர் நாமம் என்ன? இயேசு கிறிஸ்து இவரே
காலம் நிறைவேறும் போது கன்னி மரியிடம் நமக்காய்ப் பிறந்தார் வான் புவி வாழும் இயேசுவுக்கோ ஏன் இந்தப் புல்லணையோ ஏழையின் கோலமிதோ
வான பராபரன் இயேசு விண்ணையும் துறந்து மண்ணில் பிறந்தார் வந்தார் தந்தார் ஆத்தும மீட்பு சொந்த ரத்தம் சிந்தினார் சிலுவையில் பலியானார்
தீயப் பேய்களும் ஓடும் திருமகன் இயேசுவைக் கண்டு நடுங்கும் தீவினை நாசர் பாவிகள் நேசர் திருத்துவ தேவ சுதன் திருவடி அண்டிக் கொள்வோம்
பாவியை மீட்கவே வந்தார் பரிசுத்தவான்களைச் சேர்க்கவும் வருவார் வாரும் இயேசுவே என்றழைப்போம் வரும்வரை காத்திருப்போம் விழிப்புடன் ஜெபித்திடுவோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.