TA-1883
Tamil

சாந்த இயேசே, கேளும் வேண்டல்

Santha yese

25
views
1ம் சரணம்

சந்தோஷ கீதம் என்னில் பொங்குதே சர்வ வல்ல ஏசு என்னை நேசித்தார் பெற்றதாம் நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணியே பேரன்பு பொங்க என்றும் பாடுவேன் ஆர்ப்பரித்து நான் ஆனந்தங் கொள்வேன் ஆண்டவர் சமூகம் என்னைத் தேற்றுதே துன்பங்கள் யாவுமே துரிதமாய் நீங்குதே இன்ப ஏசு நாமத்தில்

2ம் சரணம்

பேரின்ப கீதம் என்னில் பொங்குதே போன நாட்கள் என்னைக் கர்த்தர் தாங்கினார் சோதனை சூழ்ந்து என் நம்பிக்கை குன்றினும் சோர்ந்தழியாமல் என்றும் காத்ததால்

3ம் சரணம்

இரட்சிப்பின் கீதம் என்னில் பொங்குதே இரட்சகர் என் பாவம் முற்றும் மன்னித்தார் மானிடர் மாறினும் அன்பை விட்டோடினும் மாதேவ அன்பில் என்னைக்காத்ததால்

4ம் சரணம்

ஆனந்த கீதம் என்னில் பொங்குதே ஆரவாரத்தோடே ஏசு தோன்றுவார் ஆவலாய் விழித்தே ஆவியில் ஜெபித்தே ஆயத்தமாய் நான் காத்து நிற்பதால்

5ம் சரணம்

சீயோனின் கீதம் என்னில் பொங்குதே சீக்கிரம் வந்தென்னைச் சேர்த்துக் கொள்ளுவார் பொன்முடி வேந்தனாம் எந்தை என் இயேசுவின் பொன்மாளிகை நான் கிட்டிச் சேர்வதால்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.