TA-1892
Tamil

சத்திய வேதத்தைத் தினம் தியானி,

Sathiya vethathai thinam

18
views
பல்லவி

சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே - இயேசு சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது - ஆ- ஆ- ஆ கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய் வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே - 2

1ம் சரணம்

கற்பனைகள் யாவும் நன்றல்லவோ - ஆ- ஆ- ஆ- ஆ கற்பனைகள் யாவும் நன்றல்லவோ அதைக் கடைப்பிடித்தாக வேண்டுமே கீழ்ப்படிந்தவர்கள் அவருக்குச் சொந்த சம்பத்து அல்லவோ கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும் கீழ்படியாவிட்டால் சாபம் பெருகும்

2ம் சரணம்

உலக மாமிசப் பிடியினின்றும் - ஆ- ஆ- ஆ- ஆ உலக மாமிசப் பிடியினின்றும் பிசாசின் தந்திர வலையினின்றும் விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம் சாத்தானை முறியடிப்போம் உப்பைப்போல கரைந்திடுவோம் மெழுகைப்போல உருகிடுவோம்

3ம் சரணம்

தேவை அதிகம் ஏராளம் - ஆ- ஆ- ஆ- ஆ தேவை அதிகம் ஏராளம் ஏராளம் ஏராளமே குஜராத்ää பீஹார் இமயத்தில் ஏராளம் ஏராளமே இராஜஸ்தான் காஷ்மீர் ஒரிஸாவில் நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார்?

4ம் சரணம்

வெற்றியே தரும் ஆண்டவர்க்கு - ஆ- ஆ- ஆ- ஆ வெற்றியே தரும் ஆண்டவர்க்கு நம்மைக் காணிக்கையாக்கிடுவோம் உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே காணிக்கையாக்கிடுவோம் தேசம் இயேசுவைக் கண்டுவிடும் சபைகள் ஏராளம் பெருகிவிடும்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.