TA-1897
Tamil

சீர் அடைதருணம் இதறி மனமே

Seei adaitharunam ithari

22
views
1ம் சரணம்

சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம், சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய் தோத்ரம், ஏர்குணனே, தோத்ரம், அடியாருக்கு இரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா.

2ம் சரணம்

நேர் மிகு அருள் திரு அன்பா, தோத்ரம் நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம், ஆர் மணணே, தோத்ரம், உனது அன்பனுக்கே தோத்ரம் மா நேசா.

3ம் சரணம்

ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் தோத்ரம் தினம், தினம், அருள் நன்மைக்காவும் தோத்ரம் ஆவலுடன் தோத்ரம், உனது அன்பினுக்கே தோத்ரம், மா நேசா.

4ம் சரணம்

ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம், அதிசய நடத்துதற்காகவும் தோத்ரம் சாற்றுகிறோம் தோத்ரம், உனது தகுமன்புக்கே தோத்ரம், மா நேசா.

5ம் சரணம்

மாறாய் பூரண நேசா தோத்ரம், மகிழொடு ஜெபமொழி மாலையின் தோத்ரம், தாராய் துணை, தோத்ரம், இந்தத் தருணமே கொடு தோத்ரம் மா நேசா.

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.