TA-1899
Tamil

சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம்,

Seer migu puvi

0
views
பல்லவி

சீர்திரியேக வஸ்தே, நமோ நமோ, நின் திருவடிக்கு நமஸ்தே, நமோ நமோ! பார்படைத்தாளும் நாதா, பரம சற்பிரசாதா, நாருறுந தூயவேதா, நமோ நமோ நமோ! – சீர்

1ம் சரணம்

தந்தைப் பராபரனே நமோ நமோ, எமைத் தாங்கி ஆதரிப்போனே – நமோ நமோ! சொந்தக் குமாரன் தந்தாய், சொல்லரும் நலமீந்தாய், எந்தவிர் போக்குமெந்தாய், நமோ நமோ நமோ – சீர்

2ம் சரணம்

எங்கள் பவத்தினாசா நமோ நமோ, புது எருசலேம் நகர்ராசா நமோ நமோ! எங்கும் நின் அரசேற, எவரும் நின் புகழ்கூற, துங்க மந்தையிற் சேர, நமோ நமோ நமோ – சீர்

3ம் சரணம்

பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ, திட பலமளித் தெமைக்காவா, நமோ நமோ! கரிசித்துத்தா நற்புத்தி, கபடற்ற மனசுத்தி, திருமொழி பற்றும்பக்தி, நமோ நமோ நமோ – சீர்