TA-1903
Tamil

ஆயலோனில் அம்புலியும் - 2

Selvoem Vaareer Iyaesu Paeril

0
views
1ம் சரணம்

செல்வோம் யாம் கோயிலுக்கு ஓய்வு நாட்கள் தோறுமே; துதி செய்வோம் யாம் நன்றாய் ஓய்வு நாட்கள் தோறுமே; பாரும். நேச தேவனே! எங்கள் ஜெபம் கேளுமே, எங்கள் நெஞ்சம் ஆற்றுமே, ஓய்வு நாட்கள் தோறுமே.

2ம் சரணம்

வேலையை யாம் விடுவோம் ஓய்வு நாட்கள் தோறுமே; உம்மையே யாம் வாழ்த்துவோம் ஓய்வு நாட்கள் தோறுமே; சோர்வுகள் நீர் நீக்குவீர், மனம் வசம் ஆக்குவீர், உமதருள் ஊற்றுவீர், ஓய்வு நாட்கள் தோறுமே.

3ம் சரணம்

தேவ வாக்கை யாம் கேட்போம் ஓய்வு நாட்கள் தோறுமே; அதைச் சிந்தியாக்குமே ஓய்வு நாட்கள் தோறுமே; போகும் இடம் வருவீர், அங்கு எம்மில் தங்குவீர், ஆசீர்வாதம் தருவீர், ஓய்வு நாட்கள் தோறுமே.